ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியைச் சேர்ந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர், இன்று (31) மாநகர சபையில் முன்வைக்கப்பட்ட வரவு–செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் எதிர்ப்புத் தீர்மானத்திற்கு முரணாக அவர் வாக்களித்ததாகக் குறிப்பிடும் முஸ்லிம் காங்கிரஸ், இது கட்சி ஒழுக்கத்திற்கான கடுமையான மீறலாகும் என தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் கட்சி அறிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், மேலதிக நடவடிக்கைகள் ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments