2026 ஆம் ஆண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிப்பித்தல் தொடர்பாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சற்று முன்பு விஷேட சுற்றறிக்கை (34/2025) வெளியிடப்பட்டுள்ளது.
2025 இன் இறுதியில் எமது நாடு முகங்கொடுத்த 'தித்வா' அனர்த்தத்திற்கு மத்தியில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் இம்முறை கடமைகளின் ஆரம்ப நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு நடைபெற வேண்டிய திகதி 2026 ஜனவரி 01 ஆம் திகதியாகும்.
நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு:
சகல அரச அலுவலகங்களிலும் பின்வரும் ஒழுங்கில் உத்தியோகபூர்வ வைபவம் நடைபெறல் வேண்டும்:
- தேசியக் கொடியை ஏற்றல் & தேசிய கீதம் இசைத்தல்.
- மௌன அஞ்சலி செலுத்துதல்: முப்படைகள் உட்பட நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல்.
- சத்தியப் பிரமாணம்: அனைத்து உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ள "அரச சேவை உறுதியுரையை / சத்தியப் பிரமாணத்தை" சத்தமாக வாசித்தல்.
- குறுகிய சொற்பொழிவு: நிறுவனத் தலைவரால் தற்போதைய சவால்கள், அரச கொள்கைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையை நிகழ்த்தல்.
விசேட தொனிப்பொருள்:
"வளமான நாடு அழகான வாழ்க்கை" என்பதன் மூலமாக சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் இம்முறை உறுதிமொழி அமைப்பட்டுள்ளது.
அனைத்து அரச உத்தியோகத்தர்களும் குறித்த நேரத்தில் கடமை நிலையங்களில் சமூகமளித்து இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

0 Comments