திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள 98 ஆம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் குரங்குக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30) மாலை இடம் பெற்றுள்ளது. 12 வயது நிறைந்த சிறுவனே இவ்வாறு குரங்கு கடிக்கு ஆளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த சிறுவன் நேற்று (30) மாலை மதக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றபோது குரங்கு கடி தாக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சிறுவன் காயங்களுக்குள்ளான நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக குரங்குகள், தொடர்ச்சியாக மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றமையால் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments