Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் இன்றைய விலை: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை இன்று (27) எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று (27) 10,000 ரூபாவால் அதிகரித்து 362,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கமானது பவுண் ஒன்று 335,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments