காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும், கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகனேரியில் கடந்த திங்கட்கிழமை (15) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 04 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தெரிய வருவதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமை போன்று வேளாண்மை காவலுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு திங்கட்கிழமை (15) காலை வேளையில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார். இதனை தொடர்ந்து கணவன் மனைவி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அது சண்டையாகவும் மாறி விட்டது. இந்நிலையில், பகல் 11.30 AM மணியளவில் கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியதுடன் கோடாரியால் மண்டையை பிளந்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments