Ticker

10/recent/ticker-posts

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவி கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்பு.

பிரபல அமெரிக்க இயக்குநரும், நடிகருமான ராப் ரெய்னர் (78) என்பவரும், அவருடைய மனைவியான மிஷெல் சிங்கர் (68) ரெய்னரும் நேற்று (14) தமது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

When Harry Met Sally முதலான பல திரைப்படங்களை இயக்கியவரும், பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர்கள் இருவரும் கத்தி க்குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக அளவில் மிகவும் பிரபலம் பெற்ற திரைப்படம் When Harry Met Sally. இத்திரைப்படத்தை இயக்கும் போதுதான் புகைப்படக்கலைஞரான மிஷெலை சந்தித்தார் ராப். மிஷெலின் பரிந்துரையின்படி திரைப்படத்தின் கிளைமாக்சை மாற்றியதுடன், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரையே காதலித்து, திருமணமும் செய்து கொண்டார் ராப்.

குழந்தைகள் நலன் மற்றும் கல்வி தொடர்பிலான திட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்த இயக்குனர் ராப், புகை பிடித்தலுக்கெதிரான பிரசாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments