Ticker

10/recent/ticker-posts

ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி: மாயாஜால தீம் ஹோட்டல் விரைவில் திறப்பு

ஹாலிவுட்டில் 08 பாகங்களாக எடுக்கப்பட்ட மிகப் பிரபலமான திரைப்படம் ஹாரி பாட்டர்.  ஜேர்மனியில் ஹரி பாட்டர் தீம்மில் (Harry potter theme) உருவாக்கப்பட்ட ஹோட்டல் விரைவில் திறக்கப்படவுள்ளது.

இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் வகையில், ஹாரி பாட்டர் ஹோட்டல் ஒன்று திறக்கப்படவுள்ளது. ஜேர்மனியின் Gunzburg நகரிலுள்ள லெகோலேண்ட் டாய்ட்ச்லாண்ட் ரிசார்ட்டின் உள்ளே குறித்த ஹோட்டல் அமையவுள்ளது.

பார்வையாளர்கள் அட்லாண்டிக் கடலைக் கடக்காமலேயே முழுமையான மாயாஜால அனுபவத்தில் மூழ்கித் திளைக்க அனுமதிக்கும் வகையில் இதன் முன்னோடித் திட்டம் இருக்கப் போகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. 

ஹாரி பாட்டர் பிரபஞ்சத்தின் வசீகரத்தையும், அதிசயத்தையும் வெளிப்படுத்துகின்ற வகையில் ஹாக்வார்ட்சின் அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மந்திர உலகின் மாயாஜாலத்தை படங்களில் இடம் பெற்றுள்ள Gryffinder, Hufflepuff, Ravenclaw மற்றும் Slytherin ஆகிய 04 வீடுகள் போன்று வடிவமைக்கப்பட்ட அறைகள் முதல், ரான் வீஸ்லியின் படுக்கையால் ஈர்க்கப்பட்ட படுக்கைகள் வரையில் உள்ளன. முன்பு கட்டப்பட்ட எதையும் போல் அல்லாமல், இந்த ஹோட்டல் பிரபலமான கற்பனைத் தொடருக்காக முழுமையான அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதலாவது ஹோட்டலாக இருக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது லெகோவின் படைப்பாற்றல் உணர்வையும் மந்திர உலகத்தின் மாயாஜாலத்தையும் ஒன்றிணைக்கின்ற அதேவேளை, ஹாரி பாட்டர் படங்களில் பார்த்ததை போன்று நிஜ உலகில் உணரும் வகையில் வார்னர் பிரதர்ஸ் Warner Brothers) இதனை உருவாக்கியுள்ளனர். 



Post a Comment

0 Comments