Ticker

10/recent/ticker-posts

கிண்ணியாவில் ஆபத்தாக மாறும் டெங்கு: வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கிண்ணியாவில் டெங்கு பரவல் ஓர் அனர்த்தமாக மாறுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் M.M. மஹ்தி தெரிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், நிறுவனத் தலைவர்கள், காணி உரிமையாளர்கள் அனைவரும் இதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும், எமது கவனக் குறைவால் இன்னொருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments