அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் 'மனுரங்' என்ற குடும்பம் வசித்து வருகின்றது.
இவர்களில் 06 சகோதர சகோதரிகளில்p 04 பேருக்கு அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தின் மீது சாபம் உள்ளது என்று தவறாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், உண்மையில் அவர்களுடைய தந்தைக்கும் இப்பாதிப்பு இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பரம்பரையாக இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது டிரீச்சர் கல்லின்ஸ் சிண்ட்ரோம் என்று மருத்துவத்தில் அழைக்கப்படுகின்றது. இதனால், முக அமைப்பு மாற்றமடைகின்றது. தோல் பலவீனமடைகின்றது.
ஆனால், உள்ளுறுப்புக்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. முதலில் அவர்களைப் பார்த்து அவர்களுடன் பழகுவதற்கு பலர் தயங்கினர்.
இதனால், ஒதுக்கப்பட்டவர்களாக சோர்வடைந்த போதிலும், விடாமல் முயற்சி செய்து, தினந்தோறும் மேற்கொள்ளும் விடயங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவற்றைப் படம் பிடித்து Tiktok, Instagram உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காணொளிகளாக வெளியிட்டனர்.
இதனால், உலகளவில் பிரபலமடைந்து வருகின்றனர். இலட்சக்கணக்கானோரை சென்றடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களின் வருகை மனுருங் குடும்பத்தின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்தது. அவர்களின் வசீகரமான தன்னம்பிக்கையும், தனித்துவமான வெளிப்படைத்தன்மையும் அவர்களுக்கு பெரும் ஆதரவையும் தேடித் தந்தது.
Youtube இல் 03 இலட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும், Tiktok இல் 2.3 மில்லியனுக்கும் அதிகமான பின்பற்றுபவர்களையும் அவர்கள் பெற்றுள்ளனர்.
இதன் மூலமாக, தங்களின் தனித்துவமான தோற்றத்தை வருமானம் ஈட்டும் வழியாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் தளமாகவும் அவர்கள் மாற்றியுள்ளனர்.

0 Comments