Ticker

10/recent/ticker-posts

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலய விருது விழா சர்ச்சை: கல்வி அமைச்சுக்கு அதிபர் விளக்கம்

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற விருது வழங்கல் விழாவின் போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில், பாடசாலை அதிபர் சுமேதா ஜயவீர கல்வியமைச்சுக்கு தனது விளக்கத்தை சமர்ப்பித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அதிபர் பல முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளார். இதன்படி, 07 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் “சிறந்த வீராங்கனை” விருதுக்கு கடுமையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அகில இலங்கை மட்டத்தில் முதல் இடம், தேசிய சாதனை அல்லது சர்வதேச அளவிலான வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்குவாஷ் வீராங்கனை சனித்மா சினாலிக்கு குறித்த விருது வழங்கப்படாதது, அவர் ஒத்திகை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக அல்ல; தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யாததாலேயே என்று அதிபர் விளக்கமளித்துள்ளார். எனினும், அவருக்கு மற்ற நிறங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பழைய மாணவியான சனித்மா மேடையில் நடந்துகொண்ட விதம் பாடசாலையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இது எதிர்கால மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையுமென்றும் அதிபர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இம்முறை “சிறந்த வீராங்கனை” விருது பெற்ற நபாஷி பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சாதனைகளைப் படைத்த நீச்சல் வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை விரைவில் தமக்கு சமர்ப்பிக்குமாறு கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments