இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து, பெண்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு அண்மையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்திலுள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 'சௌத்ரி' சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றிணைந்து இம்முடிவை எடுத்துள்ளனர்.
இத்தடை எதிர்வரும் 2026 ஜனவரி 26 முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துவதால், அவர்களுடைய குழந்தைகளும் அதிக நேரம் தொலைபேசிக்கு நேரம் செலவிடுவதாகவும் இதனால் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பெண்கள் வீட்டைத் தாண்டி பொது இடங்களுக்கு அல்லது அண்டை வீடுகளுக்குச் செல்லும் போது தொலைபேசிகளை கொண்டு செல்லக் கூடாதென்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

0 Comments