அயலக தமிழர் தினம் 2026 ஐ முன்னிட்டு தமிழ் நாடு அரசின் தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக் கழகம் நடாத்திய சர்வதேச போட்டியில், அதன் ஒரு கிளை நிறுவனமாக இலங்கையில் இயங்கி வரும் NAMS College of Higher Studies – Sri Lanka சார்பாக கதை சொல்லுதல் போட்டியில் கலந்து கொண்ட கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி (தே/பா) மாணவி முஹ்சித் ஆயிஷா ஷஹ்ரின், ஆரம்ப பிரிவில் இரண்டாம் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவருக்கான பரிசளிப்பு விழா, எதிர்வரும் 2026 ஜனவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சென்னை வர்த்தக நிலையத்தில் நடைபெறவுள்ள உலக புலம்பெயர் தின மாநாட்டில் வழங்கப்படவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொண்டு பரிசை பெறுவதற்காக, முஹ்சித் ஆயிஷா ஷஹ்ரின் ஜனவரி 10 ஆம் திகதி சென்னைக்கு பயணமாகவுள்ளார்.
குறிப்பாக, NAMS உயர் கல்விக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட 14 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசாங்கம் நடாத்திய நான்கு நிகழ்ச்சிகளில் மூன்று தடவைகள் NAMS கல்லூரி மாணவர்கள் பரிசுகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
NAMS கல்லூரி சார்பில் கலந்து கொண்டு மேலும் சில மாணவர்களும் பரிசுகள் பெற்றுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு:
ஆரம்ப பிரிவு (1 & 2 ஆம் வகுப்பு)
M.M. ஆயிஷா முஸ்திஹா – ஆறுதல் பரிசு
ஆரம்ப பிரிவு
ஆரம்ப பிரிவு (3, 4 & 5 ஆம் வகுப்பு)
கனிஷ்ட பிரிவு
இடைநிலை பிரிவு (9 & 10 ஆம் வகுப்பு)


0 Comments