Ticker

10/recent/ticker-posts

2025 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம்; எதில் தெரியுமா?

 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு (Budget) நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டம் 100 சதவீத முன்னேற்றத்தைக் காண்பித்து முதலிடத்தை பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியின் பயன்பாடு மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தினுடைய அடிப்படையில், 25 மாவட்டங்களில் இத்தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மாவட்ட அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தி ஆகிய திட்டங்களின் முடிவுறுத்திய, முடிவுறுத்தாத திட்டங்கள் தொடர்பாகவும் இத்தரப்படுதலின் போது ஆராயப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments