தென்கொரியாவில் பொய்யான தகவல்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தென்கொரியாவில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லீ ஜே மியுங் தலைமையில் தற்போது இடம் பெற்றுவருகின்ற ஆட்சியில் செய்தி நிறுவனங்களும், இணைய ஊடகங்களும் சட்ட விரோதமான, பொய்யான தகவல்களை, தீங்கு விளைவிக்கும் அல்லது இலாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் 05 மடங்கு வரை அபராதம் விதிக்கலாம் என்று நேற்று (24) அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் அதிகரித்து வரும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள், சமூக பிளவுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆளும் அரசு இதனை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர் அமைப்புகளும் இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளன.

0 Comments