இலங்கையில் HIV எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் அறிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6% ஆக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். ஆண் - பெண் விகிதாசாரம் 6:1 எனும் விகிதத்திலுள்ளது.
மேலும், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும், 03 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், HIV எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments