Ticker

10/recent/ticker-posts

தரம் 06 ஆங்கிலப் பாடப் புத்தக விவகாரம் ; பிரதமருக்கு நாமல் கூறிய விடயம்.

தரம் 06 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில் அமைச்சு அதிகாரி ஒருவர் பதவி விலகுவதை விட, பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தக விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் இப்புத்தகத்தை அச்சிட முடியாது என்றும், அமைச்சிற்குள்ளேயே தான் இது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறி முறைப்பாடு செய்வது வேடிக்கையானது" என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சினுடைய செயலாளரை யாரும் ஏமாற்ற முடியாது என்றும், ஒரு தனிநபர் ஒரு பாடப்பரப்பு தொடர்பாக தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாதென்றும் அவர் இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.




Post a Comment

0 Comments