இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (SEUSL) கலை மற்றும் கலாசார பீடத்திலுள்ள மொழித்துறையின் (Department of Languages) பதில் தலைவராக பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தின் மூலமாக, மொழித்துறையின் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை அவர் முன்னெடுத்து நடத்தவுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கலை, கலாசார பீடாதிபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், மொழித்துறைச் செயற்பாடுகள் முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நியமனத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments