2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணை அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை (05) முதல் தொடங்கவுள்ளன.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் நாளை முதல் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குமென்று கல்விமைச்சு தெரிவித்துள்ளது.
2025 டிசம்பர் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 22 ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26 ஆம் திகதியும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டை முடிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments