06 ஆம் தர மாணவர்களுக்கான ஆங்கில பாடத் தொகுதியில் சேர்க்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகம் (NIE) தீர்மானித்துள்ளது.
அண்மைக் காலமாக இப்பாடம் தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகளும் கேள்விகளும் எழுந்த நிலையில், அதனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாட உள்ளடக்கம், மாணவர்களின் வயது, கல்வி நோக்கம் மற்றும் சமூக உணர்வுகளுக்கு பொருத்தமானதா? என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகளின் அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக NIE தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட பாடப்புத்தகங்கள் இதுவரை பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக ஆய்வுகளும், தேவையான திருத்தங்களும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென்றும் NIE தெரிவித்துள்ளது.

0 Comments