தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனநிலைக்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கையை மேற்கொள்ளாமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு, கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் அமைந்து காணப்படும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் கையெழுத்திட்டதையடுத்து, பலர் கையெழுத்திட்டனர்.

0 Comments