வெனிசியூலாவுக்கு சொந்தமான சுமார் 05 கோடி பீப்பாய் மசகு எண்ணெய் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'Truth Social' தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "வெனிசியூலா தன்னிடமுள்ள 30 முதல் 50 மில்லியன் (03 முதல் 05 கோடி) பீப்பாய் மசகு எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். இது சர்வதேச சந்தை விலையில் விற்பனை செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணெய் விற்பனை மூலமாக திரட்டப்படும் நிதியானது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உடனடியாகச் செயற்படுத்த அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட்டிற்கு டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
"இந்நிதி யாருக்கும் அநியாயமாகச் சென்றடையாது. இது வெனிசியூலா மக்களின் நல்வாழ்வுக்கும் அமெரிக்காவின் நலன்களுக்கும் மாத்திரமே செலவிடப்படும் என்பதை நான் உறுதி செய்வேன்," என்று டொனால்ட் ட்ரம்ப் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
To join with whatsapp

0 Comments