Ticker

10/recent/ticker-posts

உலகக் கிண்ண T20 போட்டிகளை நடத்த தயாராகும் இலங்கை.

 உலகக் கிண்ணத்தை நடத்தும் நோக்கில் SSC மைதானத்தில் நிறுவப்பட்ட புதிய அதிநவீன LED விளக்கு அமைப்பை நிறுவும் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மைதானத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீரர்களுக்கான ஓய்வறை மேம்படுத்துதல், போட்டி அதிகாரிகள் மற்றும் நடுவர்களுக்கான புதிய அறைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மொத்த செலவு 1.7 பில்லியன் ரூபாய்க்கு மேலாகும்.

இலங்கை கிரிக்கெட் பொருளாளரான சுஜீவ கோடலியத்த மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"திட்டத்தின் மொத்த செலவு 1.7 பில்லியன் ரூபாய்க்கு மேல். போட்டிகளுக்கு ICC பணம் செலுத்துகின்றது. இலங்கை கிரிக்கெட் அதை சேகரித்து மற்ற வருமானத்துடன் இணைத்து குறித்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். 2026 ஜனவரி 20 ஆம் திகதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்." என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments