Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பொழியக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பொழியக் கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 PM மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பொழியக் கூடும்.

வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 mm அளவிலான ஓரளவு பலத்த மழை பொழியக் கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பொதுமக்கள் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments