Ticker

10/recent/ticker-posts

மன்னராட்சி கோரி நேபாளத்தில் பிரமாண்ட பேரணி.

நேபாளத்தில் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மன்னராட்சிக்கு ஆதரவு தெரிவித்து அங்கு மாபெரும் பேரணியொன்று இடம் பெற்றுள்ளது.

நேபாளத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் இடம்பெற்ற இளந்தலைமுறையினர் போராட்டத்தை அடுத்து, முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அரசு பதவி விலகியதையடுத்து இடைக்கால பிரதமராக அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அந்த நாட்டில் நிலவி வருகின்ற அரசியல் ஸ்திரமற்ற தன்மை, ஊழல், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றுக்கு ஒரே தீர்வு மன்னராட்சி மட்டுமே என்று கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அந்த நாட்டு தலைநகர் காத்மண்டுவில் நேற்று (11) பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments