Ticker

10/recent/ticker-posts

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 06 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். 

அரசியலை இலாபம் ஈட்டுகின்ற தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

அத்துடன், கொழும்பிலுள்ள 04 அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் இனி நீதித்துறை சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்காப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களைக் குறைத்து, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments