Ticker

10/recent/ticker-posts

உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகள் அமுலாகும் காலம் ஒத்திவைப்பு

உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழுள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்தி வைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்பு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, 2023 பெப்ரவரி 14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலமாக வெளியிடப்பட்ட உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகளை அமுல்படுத்துவதை, எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

உணவு லேபளிடல் (Label) மற்றும் விளம்பரப்படுத்தல் விதிமுறைகள், திரவ உணவுகளில் சீனி அளவிற்கான நிறக்குறியீட்டு விதிமுறைகள், உணவுக்கான உப்பு அயடின் கலத்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை அமுல்படுத்துதல் ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments