பிரேசில் நாட்டின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது நடவடிக்கையையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
ட்ரம்பின் நடவடிக்கை வெனிசுலாவின் இறையாண்மைக்கு கடுமையான அவமானம் என்று கூறிய அவர், UN சபையின் பதிலையும் கோரியுள்ளார்.
இதேவேளை, வெனிசுலாவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்கு பிரேசில் அதிகாரிகள் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரேசிலின் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது வெனிசுலா பிரதிநிதியுடன் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Comments