Ticker

10/recent/ticker-posts

இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

இவ்வருடத்துக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) ஆரம்பமாகியது. 

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஆரம்பமான இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் அமையும்.

  • 09.30 AM - 10.00 AM பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (06) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 
  • 10.00 AM - 11.00 AM வாய்மூலமான விடைக்கான வினாக்கள். 
  • 11.00 AM - 11.30 AM பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(02) இன் கீழ் வினாக்கள். 
  •  11.30 AM - 3.30 PM (i) கடற்றொழில் & நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்  அங்கீகரிக்கப்படவுள்ளது. 
  • (ii) கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரி திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளது. 
  • 3.30 PM - 5.30 PM பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை அங்கீகரிக்கப்படவுள்ளது. 
  • 5.30 PM மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டுமென்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு ஒன்றினை நியமிப்பதற்கான பிரேரணை  அங்கீகரிக்கப்படவுள்ளது. 

Post a Comment

0 Comments