Ticker

10/recent/ticker-posts

இணைய வசதியின்றி மொபைலில் லைவ் டிவி பார்க்கும் வசதி

இன்றைய ஜென்சி தலைமுறையினர் பலர் TV பார்க்காமல் இருந்து விடுவார்கள். மொபைலின்றி இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கைப்பேசிகள் பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது.

எனினும், இணைய வசதிதான் இதற்கு ஒக்சிஜன் போன்று உள்ளது. இணைய வசதி இல்லையென்றால் Youtube இல் Video Live தொலைக்காட்சிகளை பார்க்க முடியாது. 

ஆனால், இதனை மாற்றும் வகையில் புதிய தொழிநுட்பத்தை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ‘Direct to mobile’ என்ற புதிய தொழிநுட்பத்தை கொண்டு வரும் முயற்சியில் தொலைத்தொடர்புத் துறை ஈடுபட்டுள்ளது. 

இத்தொழிநுட்பத்தின் மூலமாக Live TV நிகழ்ச்சிகளை மொபைலில் பார்வையாளர்கள் இணையத்தள வசதி இல்லாமலேயே கண்டு களிக்க முடியும். 

தற்சமயம் சோதனை முயற்சியில் இருக்கும் இந்த டெக்னாலஜியை மிகக் கூடிய விரைவில் இந்தியாவில் 19 நகரங்களில் பெருமளவில் அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, செயற்கைக்கோள் மூலமாக நேரடியாக மொபைலுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப அடிப்படையில் இது இயங்கும். 

இதற்காக பிரத்யேக சிப் (Chip) பொருத்தப்பட்ட செல்போன்களை தயாரிக்கும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்படி, பெங்களூரிள்ள ‘சான்கியா லேப்ஸ்’ என்ற நிறுவனம் இந்த சிப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

பேரிடர் காலங்களிலும் செல்போன் சிக்னல் இல்லாத பகுதிகளுக்கும் இது பெரும் பயனளிக்குமென்று தெரிவிக்கப்படுகிறது. இச்சேவையை முடிந்தவரை விரைவாக கொண்டு வர அரசு தீவிரம் காட்டி வருகின்றது. 

அதே நேரத்தில், இணைய சேவையால் பெரும் இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமென்றும் சொல்லப்படுகின்றது.




Post a Comment

0 Comments