Ticker

10/recent/ticker-posts

‘குரோக்’ செயலிக்கு அதிரடியாக தடை விதித்த நாடு.

தொழிலதிபா் எலான் மஸ்கின் X-AI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான குரோக் இணையத்தளத்துக்கும், அதன் செயலிக்கும் (App) இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிக் காட்டுவது போன்ற குரோக்கின் (Grok) உள்ளடக்கங்கள் இந்தோனேசியாவின் சட்டங்கள் மற்றும் கலாசார மாண்புகளுக்கும் எதிராகவும் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்ளதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இத்தடை நேற்று முன்தினம் (09) அமுலுக்கு வந்ததையடுத்து அனைத்து இணைய சேவை நிறுவனங்களும் இதனை செயற்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments