Ticker

10/recent/ticker-posts

கோமா நிலையிலிருந்து மீண்ட முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டேமியன் மார்ட்டின் என்பவர் கோமா நிலையிலிருந்து குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் சென்ற மாத இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குயின்ஸ்லாந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டிருந்த நிலையில் மூளைக் காய்ச்சல் காரணமாகக் சென்ற வாரம் கோமா நிலைக்கு சென்றுள்ளார். 

தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்த இவர், கடந்த 48 மணிநேரத்தில் கோமா நிலையிலிருந்து மீண்டு பேசத் தொடங்கியுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

மார்ட்டினின் நெருங்கிய நண்பரும் முன்னாள் சக வீரருமான எடம் கில்கிறிஸ்ட், மார்ட்டினின் குடும்பம் சார்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் "நிலைமை இவ்வளவு விரைவாகச் சீரடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments