Ticker

6/recent/ticker-posts

ஐ.நா. பொதுச் சபைக்கு புதிய தலைவர் நியமனம்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து செயற்படும், ஐ.நா. அமைப்பின்  பொதுச் சபைக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பரில்  கூடும்.

 




இதன் பிரகாரம், வரும் செப்டெம்பரில் கூடவுள்ள 80 வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனலீனா பேர்பாக் நேற்று (02) தெரிவு செய்யப்பட்டார். ஓராண்டுக்கு இப்பொறுப்பில் அவர் இருப்பார்.

 


தற்போது, தலைவர் பொறுப்பில் மத்திய ஆபிரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்க் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments