ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாக்ஸ் 13’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா உயிரிழந்து்ளளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷெஃபாலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது கணவரும், நடிகருமான பராக் த்யாகி, அவரை மும்பையிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இசை வீடியோ ஆல்பமான ‘Kaanta Laga’ மூலமாக ஷெஃபாலி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து, ‘முஜ்சே ஷாதி கரோகி’ என்ற படத்தில் சல்மான் கானுடன் நடித்தார். 2019-ல் ‘பேபி கம் நா’ என்ற வெப் சீரிஸிலும் நடித்தார், மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், 42 வயதான அவர் திடீரென மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என்று பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments