Ticker

6/recent/ticker-posts

உலகின் உயரமான ரயில் பாலம் திறந்து வைப்பு.

ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகவும் உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (06) திறந்து வைத்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் முதல் முறையாக ஜம்மு – காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, ரயில்வே கட்டுமானங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை இன்று (06) தொடங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் அமைப்பதற்கு காரணமாக இருந்த பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். குறித்த பாலம் 473 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கால நிலையிலும் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்குமிடையே தடையற்ற ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.

இதனைத் தொடர்ந்து இப்பாலம் வழியாக இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயிலை பிரதமர் மோடி கொடி யினைஅசைத்து தொடங்கி வைத்தார். கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்குமிடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றது. கத்ராவிலிருந்து ஸ்ரீநகர் செல்ல சுமார் 03 மணி நேரம் மட்டுமே ஆகும். இதனால், தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments