Ticker

6/recent/ticker-posts

யானைகளை கொன்று, மாமிசத்தை மக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ள ஜிம்பாப்வே அரசாங்கம்.

ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்குமிடையே ஏற்படும் மோதலை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யானைகளிலிருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலக அளவில் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments