கடந்த 2025 மே மாதம் தொடக்கம் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகன அளவு குறைவடைந்துள்ளதாகவும் மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய மோசமான வானிலை மற்றும் பருவ மழை காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் அதிகமான கடற் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும், இதன் விளைவாக மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக பொது மக்கள் கவலை பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் ஹட்டனில், தலபத், கொப்பரா ஆகிய மீன்களின் 01 கிலோ திராம் சில்லறை விலை 3,200 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்களின் விலை உயர்வு இன்னும் பல நாட்களுக்கு தொடருமென்றும், இதற்கு இணையாக குளத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments