தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லையென்று பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (04) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
பரீட்சை மீதான அழுத்தம்
இதன் போது பிரதமர் ஹரிணி தெரிவித்ததாவது, “தற்போது தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் திட்டம் எதுவும் இல்லை, புதிய சீர்திருத்தங்களின் விளைவுகளின்படி இதனை செய்ய எதிர்பார்க்கிறோம்.
எனினும், புலமைப்பரிசில் பரீட்சை மீதான அழுத்தத்தைக் குறைக்க நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 2028 அல்லது 2029 க்குள் அதனை செயற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
TO JOIN WITH US:
0 Comments