செர்பியாவின் தலைநகரான பெல்கிரேடில் தற்போதைய அரசாங்கத்தை எதிர்த்து பாரியளவிலான போராட்டங்கள் நடந்து வருகின்றன. செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் 12 வருட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரக் கோரியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின் பிரகாரம் மாணவர்கள் தலைமையிலான இப்போராட்டம் சமீபத்திய செர்பிய வரலாற்றில் மிகப் பெரியதொன்றாகும். இதில் சுமார் 140,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இப்போராட்டக்காரர்கள் தேர்தல்களை நடாத்துமாறு கோரிக்கை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு வெளிநாட்டு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி வுசிகென்சவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments