பிரான்ஸில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் புகையிலை தொடர்பான நோயால் மரணிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆண்டுக்கு சுமார் 75,000 பேர் மரணிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, புகைப்பிடிப்பதற்கு தடை விதிப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், பிரான்ஸில் பாடசாலைகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரை அருகே புகைப்பிடிப்பதற்கு தற்போது தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தடையானது 2025 ஜூலை 01 முதல் அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அரசு அறிவிப்பு நேற்று (28) வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments