உத்தேச மின்சார திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட மின்சார திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் திருத்தப்பட வேண்டுமென்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நடைபெற்று வரும் விஷேட அமர்வின் போது உரையாற்றிய றிஸ்வி சாலி, உயர் நீதிமன்றம் முன்மொழியப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு இணங்காததால், அதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை பரிசீலித்த பின்னர் அவற்றைத் திருத்துமாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments