Ticker

6/recent/ticker-posts

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்.

 தாய்லாந்து பிரதமர் பயோங்டன் ஷினவத்ராவின் தொலைபேசி அழைப்பு கசிந்ததையொடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


முன்னாள் கம்போடியத் தலைவர் ஹன் செனுடன் தொலைபேசியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உரையாடலே இவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமாகும்.



அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது நாட்டின் நீதிமன்றங்களால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகளும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



கடந்த 02 தசாப்தங்களாக தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சக்தி வாய்ந்த ஷினவத்ரா குலத்தைச் சேர்ந்த 03 வது அரசியல்வாதியாக அவர் பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்னரே அதிகாரத்தை இழக்க நேரிட்டுள்ளது.



சூரியா ஜங்ருங்ருங்கிட் வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவியை நிரப்புவதற்காக நாட்டின் தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.



Post a Comment

0 Comments