போக்குவரத்து அபராதத்தை இணைய வழியில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இத்னை கூறினார்.
“இப்போது அபராதம் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்தது. தற்போது, குருநாகல் முதல் அநுராதபுரம் வரை மட்டுமே தொலைபேசி மூலமாக அபராதம் செலுத்த முடியும்.
இலங்கையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இப்போது தொலைபேசிகளை வழங்கி வருகின்றோம். இந்த வருடம் முதல், எங்கிருந்தும் அபராதம் செலுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments