Ticker

10/recent/ticker-posts

பல்கலைக்கழக அனுமதி 2024/2025: கலைப்பிரிவு சிறப்புப் பாடங்களுக்கான மேலதிக அனுமதி தொடர்பான அறிவிப்பு.

2024/2025 கல்வியாண்டிற்கான கலைப்பிரிவு சிறப்புப் பாடங்களுக்கான (Arts Special Subjects) மேலதிக அனுமதி (Additional Intake) தொடர்பான முக்கிய அறிவித்தலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இறுதித் திகதி: 2026 ஜனவரி 02

விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:

  • விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தமது தெரிவு குறித்த விபரங்களை பின்வரும் வழிமுறைகளில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்:
  • உங்களது மின்னஞ்சல் முகவரியை (Email) சரிபார்க்கவும்.
  • உங்களுடைய கைபேசிக்கு (Mobile) வந்த குறுஞ்செய்திகளை (SMS) சரிபார்க்கவும்.
  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உங்கள் கணக்கிற்குள் (User Account) பிரவேசித்து தேவையான விபரங்களை அறியலாம்.
  • பதிவு நடைமுறைகளை ஆரம்பிக்கும் முன்னர், உங்களது தெரிவு கடிதத்தை கட்டாயம் தரவிறக்கம் செய்ய வேண்டும். தெரிவுக் கடிதம் (Letter of Selection மிக முக்கியமான ஆவணமாகும்.
  • தெரிவு கடிதத்தை தரவிறக்கம் (Download) செய்த பின்னரே, உத்தியோகபூர்வ இணையத்தள நுழைவாயிலூடாக (Portal) பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
  • குறிப்பு: தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் ஜனவரி 02, 2026 ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தவறினால் உங்கள் தெரிவு இரத்துச் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments