பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் காலிதா ஸியா (80) இன்று காலை (30) டாக்காவில் காலமானார்.
அவர் நீண்டகால நோயின் காரணமாக டாக்காவிலுள்ள வைத்தியாசலையில் (Evercare Hospital) சிகிச்சை பெற்று வந்தார். லிவர் சிரோசிஸ், நீரிழிவு, மார்பு மற்றும் இதய பிரச்சனைகள் உட்பட பல ஆரோக்கிய சிக்கல்களை இவர் எதிர் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமராவார் மற்றும் நாடு அரசியலின் முக்கியமான வரலாற்று காணொளிகளிலும் இடம் பெற்றவர். மேலும், இவர் பங்களாதேஷ் அரசியலலில் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவராக இருந்தார், குறிப்பாக தற்போதைய மற்றும் பழைய அரசியல் தலைவரான ஷேக் ஹசீனாவுடன் நீண்டகால அரசியல் போட்டியை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
TO JOIN WITH WHATSAPP:

0 Comments