Ticker

10/recent/ticker-posts

இன்று தங்கத்தின் விலை: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

இன்று புதன்கிழமை (24) கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் (08 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூபாய் 354,000 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று (23) இதனுடைய விலை ரூ. 352,000 ஆகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ரூபாய் 2,000 அதிகரித்துள்ளது.

அதேபோன்று, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூபாய் 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று (23) இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது. இதுவும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகின்றது.

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளமையே குறித்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments