உலகம் முழுவதுமுள்ள மக்கள் நாளை (25) கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை இராட்சச வெள்ளத்தின் மூலமாக கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என்று தன்னைத்தானே 'தீர்க்கதரிசி' என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா (eboh noah)என்பவர் பகீர் தகவலை கூறியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நாடுகளிலும் அவ்வப்போது ஏற்பட்டும் இயற்கை பேரழிவுகள் சுனாமி, தீ பற்றுவது, மழை வெள்ளத்தால் மக்கள் மடிவது, மண் சரிவு ஏற்பட்டு மக்கள் இறப்பது என்று பல இயற்கை பேரழிவுகளால் மக்கள் உயிரிழப்பு ஏற்படும்.
கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகின்றார். அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கலாமே தவிர நடப்பதனை தடுக்க முடியாது. அதே சமயம் இன்னமும் இயற்கைப் பேரழிவுகளை முழுதாக கணிக்கின்ற அளவுக்கு உலக விஞ்ஞானமும் முன்னேறவில்லை.
ஒரு பக்கம் உலகப் பேரழிவுகளை கணிப்பதாக சில தீர்க்கதரிசிகளும் உலக நாடுகளில் இருக்கின்றனர். பல்கேரிய தீர்க்கதரி பாவா வாங்கா கணிப்புக்கள் உலகளவில் அதிகம் மக்களால் நம்பப்படுகின்றது.
இவ்வருடம் சுனாமி வரும், இவ்வருடம் மழை வெள்ளத்தில் மக்கள் இறந்து போவர், இவ்வருடம் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், இவ்வருடம் ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறந்து போவார்கள் என்றெல்லாம் அவர்கள் ஜோதிடம் சொல்வார்கள்.
அதில் ஆச்சரியப்படும் வகையில் அவற்றில் ஒரு சில விஷயங்கள் நிஜத்தில் நடப்பதுமுண்டு. அப்படி நடக்கும் போது அவர்களை கடவுளாக சிலர் வணங்கி அவர்களை பின்பற்றுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தான் கிறிஸ்துமஸ் தினமான நாளை இராட்சச வெள்ளத்தின் மூலமாக கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என்று கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் தெரிவித்துள்ளார்.
அழிவுக்குப் பின்னர் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போன்று 08 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியதால் அவரை பின் தொடர்பவர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்று அவருக்கு பணங்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments