அனைத்து பாடசாலைகளும் இன்று (16) திறக்கப்பட்டாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்படவுள்ளது.
அதன் பின்னர், டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ள GCE (A/L) பரீட்சையை கருத்திற் கொண்டு அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் 2026 ஜனவரி 12 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், GCE (O/L) பரீட்சையை கருத்திற் கொண்டு 2026 பெப்ரவரி 14 ஆம் திகதியிலிருந்து மார்ச் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மாணவர்கள் வழக்கமான தமது பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை என்றும், தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments