ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்க, மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே அவர் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததால் ஏற்பட்ட களங்கம் மற்றும் நிதி இழப்புக்கு நஷ்டஈடு கோரி, அவர் ஏற்கனவே அந்த நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அத்தோடு, வழக்கினூடாக, வருமான இழப்பு, நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபை மீது சுமத்தி, ஹத்துருசிங்க 05 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடும் கோரியிருந்தார்.

0 Comments