செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழிநுட்ப வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் பிரகாரம், இந்தியா தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் மூன்றாவது மிகப் போட்டித்திறன் கொண்ட நாடாகவும் உயர்ந்துள்ளது.
தரவரிசையில்,
அமெரிக்கா - 78.6 புள்ளிகள்
சீனா - 36.95 புள்ளிகள்
இந்தியா - 21.59 புள்ளிகள்
குறித்த தரவரிசை, இந்தியாவின் AI துறையில் வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடும் போது இன்னும் பெரிய இடைவெளி இருந்தாலும், இந்தியா ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற முன்னணி நாடுகளை விட மேல் இடத்திலுள்ளது.
இத்தரவரிசை திறமையான மனித வளம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முதலீடு, அரசியல் ஆதரவு, கட்டமைப்பு, பொருளாதார தாக்கம் போன்ற அம்சங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
2030 இற்குள் அமேசான் நிறுவனம் 35 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது, இது ஆசியாவில் மிகப் பெரிய AI முதலீடாகும்.
அதேபோன்று Intel, Cognizant, OpenAI ஆகிய நிறுவனங்கள் கூட்டாண்மை மற்றும் முதலீட்டு திட்டங்களையும் அறிவித்துள்ளன.
இந்தியாவின் தொழிநுட்ப சூழல், திறமையான இளைஞர்கள், வலுவான முதலீடுகள் ஆகியவை செயற்கை நுண்ணறிவு துறையில் நாட்டை வேகமாக முன்னேற்றுகின்றன.
இந்த வளர்ச்சியானது இந்தியாவை உலக AI மையமாக மாற்றும் திறன் கொண்டது. அடுத்த சில வருடங்களில் இந்தியா செயற்கை நுண்ணறிவு, Cloud, Logistics போன்ற துறைகளில் உலகளாவிய முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் நிலைக்கு வரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

0 Comments