Ticker

10/recent/ticker-posts

புதிய கல்விச் சீர்திருத்தம் : GCE (O/L) பரீட்சையில் 05 கட்டாயப் பாடங்கள்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம், GCE (O/L) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை 07 ஆக குறைக்கப்படவுள்ளதுடன், 

குறித்த 07 பாடங்களில் கணிதம், ஆங்கிலம், தாய்மொழி, சமயம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய 05 பாடங்களை மாணவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டுமென்று கல்வியமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluwewe) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தொழிநுட்பம், அழகியல், முகாமைத்துவம் மற்றும் தொழில் முனைவு, மனித நேயம் மற்றும் சமூக அறிவியல், மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற பிரிவுகளிலிருந்து மேலும் 02 பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்ருக்கு வழங்கிய செவ்வியின் போதே நாலக களுவெவ இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments